453. சென்னையின் நாதியற்ற புராதானச் சின்னங்கள்
சென்னையின் புராதானச் சின்னங்களான பல ஆங்கிலேய காலத்துக் கட்டடங்கள் (Heritage buildings) பராமரிப்புக்கான சரியான அரசு திட்டம் இல்லாததால், நாதியற்று சீரழிந்து சிதிலமடைந்து (அல்லது இடிக்கப்பட்டு!) வருகின்றன. சென்னையில் 200-க்கும் மேற்பட்ட (100 ஆண்டுகளுக்கு மேல் பழமை மிக்க) வரலாற்று சிறப்பு மிக்க கட்டடங்கள் இருந்தும், இவற்றைப் பாதுகாக்க சட்டம் (Heritage act) எதுவும் இதுவரை இயற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இவற்றில் சில மக்கட் போராட்டத்தால் காப்பற்றப்பட்டிருப்பினும், அவற்றை பாதுகாப்பது குறித்து யாரும் கவலைப்படுவதில்லை :( சென்னை தனது வரலாற்று சிறப்பு மிக்க நினைவுச் சின்னங்களை (கேட்பார் / கவனிப்பார் அற்று) கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது.
1. கோகலே கூடம்: 94 வருடங்கள் பழமையான இதன் உட்பகுதிகள், நீதிமன்றத்தின் தடை (இன்று) வருவதற்கு முன்பாகவே, இடிக்கப்பட்டு விட்டன. YMIA-இல் உள்ள சிலரது பண ஆசைக்கு இது பலியாகி விட்டது. பெசண்ட் நினைவுக் கட்டடம் (Besant Memorial Building) என்றும் அழைக்கப்படும் இது ஆர்மேனியன் தெருவில் உள்ளது. இந்த இடத்திலிருந்து தான் அன்னி பெசண்ட் அம்மையார் சுயாட்சிக்கான போராட்டத்தை தொடக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. "விழித்தெழு இந்தியா" என்ற தலைப்பில் வரலாற்று சிறப்பு மிக்க தொடர் உரைகளை அன்னி பெசண்ட் அம்மையார் இதே கூடத்திலிருந்து தான் நிகழ்த்தினார்!
இது 30000 சதுர அடி பரப்பளவு கொண்ட மூன்று மாடிக் கட்டடம் இது. 1916-இல் இவ்விடத்தில் சுயாட்சி லீக் தொடங்கப்பட்டது. கோகலே கூடத்தில் மகாத்மா காந்தி, தாகூர், சத்தியமூர்த்தி போன்றோர் பிரசித்தி பெற்ற எழுச்சி உரைகளை ந்கழ்த்தியுள்ளனர். அன்னி பெசண்ட் அம்மையார் 'மதராஸ் பாராளுமன்றம்' (Madras Parliament) என்ற இயக்கத்தைத் தொடங்கினார். அவ்வியக்கமே, VK கிருஷ்ணமேனன், KC ரெட்டி (கர்னாடகாவின் முதல் முதல்வர்), R வெங்கட்ராமன் போன்றோருக்கு பயிற்சிக்களமாக விளங்கியது.
அது போலவே, 1940, 1950களில் பிரசித்தி பெற்ற கர்னாடக இசை மேதைகளான முசிரி சுப்ரமணிய ஐயர், அரியகுடி ராமானுஜ அய்யங்கார், மதுரை மணி ஐயர், ராஜரத்தினம் பிள்ளை, GN பாலசுப்ரமணியம், KP சுந்தராம்பாள், DK பட்டம்மாள் போன்றொர் இங்கு இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர்.
இப்போது அதன் புராதனத்தன்மை குன்றா வண்ணம், அதன் வெளிப்புறத்தையாவது சீரமைக்க முடியுமா என்று YMIA-வில் நல்லவர் யாராவது யோசிப்பார் என்று நம்புவோம் !
இந்திய விடுதலைப் போராட்டத்துடன் தொடர்புடையதும், பாரம்பரியச் சிறப்பு மிக்கதுமானவற்றின் மீது கூட அக்கறை இல்லாத நாமெல்லாம் உருப்படுவோமா ? :(
2. அட்மிரால்டி ஹவுஸ்: சட்டமன்ற உறுப்பினர் விடுதி அமைந்துள்ள அரசு எஸ்டேட் வளாகத்தில் இருக்கும், 208 வருட பாரம்பரியமிக்க இந்த கட்டடத்தை, அரசு மனது வைத்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம். அடிப்படை பராமரிப்பு கூட இல்லாமல் சீரழிந்து போய் இடிந்து விழும் நிலைக்குத் தள்ளப்பட்ட இக்கட்டடம் தற்போது இடிக்கப்பட்டு வருகிறது. அவ்விடத்தில், ரூ.200 கோடி செலவில் சட்டமன்ற வளாகம் கட்டப்படவுள்ளது.
3. காவல் தலைமையகம், மெரினா: INTACH (Indian National Trust for Art and Cultural Heritage) என்ற அமைப்பும், சில புராதான ஆர்வலர்களும் சேர்ந்து நீதிமன்றத்துக்குச் சென்று தடை வாங்கியதால், ஆங்கிலேயக் கட்டடக் கலையின் (Colonial Architecture) சிறப்பை நேர்த்தியாக வெளிப்படுத்தும், 70 வருட பழமையான இக்கட்டடம், இடிக்கப்படுவதிலிருந்து தப்பித்தது. 1996-இல் புதுப்பிக்கப்பட்டது.
4. ராணி மேரிக் கல்லூரி, மெரினா: 110 ஆண்டுகள் பழமையான இவ்வளாகக் கட்டடங்களை இடித்து விட்டு அங்கு புத்தம்புது சட்டமன்ற வளாகம் அமைக்க அப்போதைய முதல்வர் ஜெ தீட்டிய திட்டம் ஆசிரியர்-மாணவி கூட்டணியின் போராட்டத்தால் கைவிடப்பட்டது. கடற்கரைப் பகுதியில் உள்ள கட்டடங்களை இடிப்பதற்கு, மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியை பெற்றாக வேண்டிய சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. அமைச்சர் TR.பாலு ஜெயலலிதாவை தோற்கடிப்பதற்காக இந்த நடவடிக்கையை மேற்கொண்டார் என்றாலும், இந்த புராதானச் சின்னம் காப்பாற்றப்பட்டதில் பலருக்கும் மகிழ்ச்சியே.
5. பாரத் இன்சூரன்ஸ் கட்டடம், அண்ணா சாலை: 1897-இல் "கார்டில் பில்டிங்" என்ற பெயரில் கட்டப்பட்ட இது, இந்தோ-சரசெனிக் கட்டடக்கலைக்கு (Indo-Saracenic architecture) ஓர் அற்புதமான வரலாற்றுச் சான்றாக, இன்றும் நின்று கொண்டிருக்கிறது. இதன் உரிமையாளரான LIC நிறுவனம், ஆகஸ்ட் 2006-இல் (பராமரிப்பு மற்றும் புதுப்பிக்கும் செலவு அதிகமாகிறது என்ற காரணத்துடன்!) இதை இடிக்க முற்பட்டபோது, INTACH நீதிமன்றம் சென்று இடிப்பதை தடுத்து நிறுத்தியது. தற்போது இக்கட்டடம், கொஞ்சம் கொஞ்சமாக சீரமைக்கப்பட்டு வருகிறது.
உங்களுக்காக, இன்னும் சில புராதானச் சின்னங்களின் புகைப்படங்கள்:
விவேகானந்தர் இல்லம் (1842)
ரிப்பன் கட்டடம் (1913)
சாந்தோம் சர்ச் (பதினாறாம் நூற்றாண்டு)
தியோசாபிகல் ஸொஸைடி (அடையாறு)
செனேட் இல்லம் (1874, சென்னைப் பல்கலைக்கழக வளாகம்)
எ.அ.பாலா
சில புகைப்படங்களுக்கு நன்றி:
http://timkarolsvoboda.blogspot.com
http://flickr.com/photos/bratboy76/
16 மறுமொழிகள்:
Test !
சரித்திரத்தையே தங்களுக்குச் சாதகமா மாற்றி எழுதுறவங்க எப்படிங்க சரித்திர சம்பந்தமுள்ளப் புராதனச் சின்னங்களைப் பாதுகாக்க நினைப்பாங்க? (-:
பழைய கோயில்கள் இருக்கு நிலைகளைப் பார்த்தீங்களா?
வரலாறு நமது வழிகாட்டி. நினைவுச்சின்னங்கள் என்பவை வெறும் காட்சிபொருள் அல்ல. அவை வரலாற்றின் அடையாளங்கள்.
வரலாற்றை வழிகாட்டியாக எந்தவொரு நாடும் சமூகமும் முன்னேறாது.
வரலாற்றுச்சின்னங்களை பாதுகாக்காத அரசு மக்கள் அரசுமல்ல, ஆட்சியாளர்கள் மக்கள் தலைவர்களும் அல்ல.
கவலைப்படாதீங்க. சாந்தோம் சர்ச்சும், தியாசபிகல் சொஸைட்டி கட்டடத்திற்கும் முழுப்பாதுகாப்பு "செக்குலரிஸ" ஆட்சியாளர்களால் அளிக்கப்படும்.
புனித தோமையார்தான் திருவள்ளுவர் என்றும், இன்றைய தமிழர்நாகரீகம், கலை, இலக்கியம்,சிந்தனை இவை அனைத்துமே கிறித்துவத்தின் தழுவல்தான் என்று புதிய வரலாறு எழுதிக்கொண்டிருக்கும் கழக "செக்குலர்" ஆட்சிக்கு தேர்தல் ஆதரவு பேச்சுவார்த்தை, பணப்பட்டுவாடான்னு பல புரிந்துணர்வு பரிவர்த்தனைகள் நடக்கும் இடங்களாச்சே சாந்தோம் சர்ச்சும்,தியாஸப்பிகல் செஸைட்டியும்!
தமிழகத்தை ஆளும் கழகத்தின் மதசார்பற்ற "செக்குலர்"அரசு இப்படியான புனிததோமையாரின் புரட்(சி)டு வரலாற்றை சினிமா அடிமைகளான தமிழர்கள் உணர 100கோடி நிதியில் சினிமாவாக எடுத்து வரலாற்றைப் பேண உதவியிருக்கிறார்களே.
கழகத்தின் சாதனையான இதைப் பாராட்ட வேண்டாமா?? சோற்றால் அடித்த பிண்டங்களான தமிழர்கள்?!!
சென்ட்ரல் மற்றும் எழும்பூர் இரயில் நிலையங்களை விட்டு விட்டீர்களே! அருமையான தகவல்களையும் புகைப்படங்களையும் தந்தமைக்கு நன்றி.
A very good post on the current situation of chennai, indeed tamil nadu. Very nice pictures.
Sorry that i am writing comments in english. Dont have a proper software. Will try to write in tamil the next time :) enjoyed reading your blog
http://suganyajawahar.blogspot.com
துளசி அக்கா,
கருத்துக்கு நன்றி. பாரம்பரிய கலாச்சாரச் சின்னங்கள் என்ற வகையில், கோயில்கள் பாதுகாக்கப்பட வேண்டும், இதில் ஆத்திகம்/நாத்திகம் பார்ப்பது பேதமை :( திராவிடக் கொள்கை கூட "ஒன்றே குலம், ஒருவனே தேவன்" தானே ??? பதிவுக்குச் சம்பந்தமில்லாத ஒரு கருத்து: நல்ல வேளை, திருப்பதி தமிழ்நாட்டில் இல்லை !!!
சீத்தா.பிரபாகரன்,
வருகைக்கு நன்றி. உங்கள் கருத்து மிகச் சரியான ஒன்று.
Hariharan,
ரொம்ப நாளைக்கப்புறம் வந்துள்ளீர்கள், வாங்க ! நான் பொதுவாக, புராதானச் சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்த இதை எழுதினேன். எந்த அரசியல் நோக்கமும் கிடையாது, இதில் அரசியலும் தேவையில்லை ! நன்றி.
expatguru,
நன்றி. சீக்கிரம் எக்மோர் / சென்ட்ரல் பற்றிய விவரங்களை பதிவில் சேர்த்து விடுகிறேன்.
Suganya,
Thanks for your comments. Read some postings in your blog. Good stuff !
எ.அ.பாலா
மெட்ராஸ் வீக் 2008ஐ முன்னிட்டு, நேற்றைய தினம் சேமியர்ஸ் சாலையில் சென்னையின் பழைமையான கோயில்களைப்பற்றி, வரலாற்று ஆராய்ச்சியாளர் டாக்டர்.சித்ரா மாதவன் ஒரு "பவர் பாயின்ட்" ப்ரசன்டேஷன் கொடுத்தார். அதில் புராதனக் கோயில்களைப் புனருத்ராணம் செய்கிறேன் பேர்வழி என்று எப்படியெல்லாம் கொடுமைப்படுத்துகிறார்கள் என்று மிகுந்த ஆதங்கத்துடன் தெரிவித்தார். (கல்வெட்டுக்கள் மறையும் வண்ணம் மூணு கோட் அக்ரலிக் பெயிண்ட் அடிப்பது!!!, பிரகாரச் சுவற்றில், "பாத்ரூம் டைல்ஸ்" பதிப்பது!!!)
- சிமுலேஷன்
//பதிவுக்குச் சம்பந்தமில்லாத ஒரு கருத்து: நல்ல வேளை, திருப்பதி தமிழ்நாட்டில் இல்லை !!!//
பாலா,
இருந்துருந்தா அரசியல் கண்ணோட்டமே
மாறி இருக்கும். வருமானம் கொட்டும் இடத்துக்கு எதிரா யாராவது வாயைத் திறப்பாங்களா? :-)))))
ஸிமுலேஷன்,
இப்படியெல்லாம் வேற அக்கிரமம் பண்றாங்களா ? :(
experts கிட்ட கேட்டு செய்ய மாட்டாங்களா ?
துளசி அக்கா,
நீங்க சொல்றது தான் சரி ;-)
எ.அ.பாலா
Appropriate post when Madras day (week) is being celebrated ...
நீங்கள் bharath insurance என்று போட்டிருக்கும் புகைப்படம் சரியல்ல என்று நினைக்கிறேன்.உங்கள் பதிவில் உள்ளது higgin bothams இருக்கும் கட்டிடம்.
bharath insurance கட்டிடம் அதற்கு எதிரில் உள்ளது .இப்போது அந்த கட்டிடம் உபயோகத்தில் இல்லை என்று நினைக்கிறேன்.இந்த கட்டிடமும் இடிக்கப்படாமல் ஒரு வழக்கு மூலமாகத்தான் காப்பற்றப்பட்டது
//பதிவுக்குச் சம்பந்தமில்லாத ஒரு கருத்து: நல்ல வேளை, திருப்பதி தமிழ்நாட்டில் இல்லை !!!//
பாலா,
இருந்துருந்தா அரசியல் கண்ணோட்டமே
மாறி இருக்கும். வருமானம் கொட்டும் இடத்துக்கு எதிரா யாராவது வாயைத் திறப்பாங்களா? //
துளசியக்கா,
திருப்பதி தமிழ்நாட்டில் இருந்திருந்தா பெருமாள் தேசமெல்லாம் இப்போ இருக்கிறமாதிரி பிரபலமே ஆகியிருக்கமாட்டார்.
திருப்பதி பெருமாள் இப்போ ஆந்திராவில் இருப்பதால் தேசமெங்கும் பிரபலமான மாதிரி இல்லாதுது போயிருப்பார் தமிழ்நாட்டிலே.
திருப்பதி தமிழ்நாட்டுடன் சேர்ந்திருந்தா தமிழ்நாடெங்கும் நாத்திக பகுத்தறிவு?? பல்கிப்பெருகியதில் இதர மாநிலத்து பக்தர்கள் வரத்து குறைவாகி தான் உண்டுன்னு அமைதியா திருப்பதி பெருமாள் தான் குபேரனிடம் கைமாத்தா வாங்கின பொருளுக்கு வட்டியை திருப்பிக்கூட செலுத்தமுடியாத கடனாளி ஆயிருப்பார் !!
பெருமாள் கடனாளியாவதை விரும்பவில்லை தமிழகத்தினுள்ளே இருக்கவில்லை!!
தமிழ்நாட்டில் இருக்கும் பூலோகவைகுண்டத்தின் ரங்கநாதப் பெருமானையே கோவிலுக்கு வெளியே மிரட்டும்படி கையில் குச்சியோடு பகுத்தறிவுபகலவன் சிலையா நிக்கவைக்கப்பட்டிருப்பது தமிழகத்தின் நிலை!
அனானி, Hariharan,
நன்றி.
பாபு,
தவறை சுட்டியமைக்கு நன்றி. இப்போது சரியான படத்தை பதிந்துள்ளேன் :)
எ.அ.பாலா
பாலா,
நான் பல வருடங்களாக புகைப்படம் பிடித்து ஒவ்வொரு கருத்துகளை முடிந்த வரை தவறு இல்லாமல் தந்து வருகிறேன். இப்படிப்பட்ட முயற்சியில் எனது flickr.com/photos/bratboy76 என்ற website உருவானது. இதுவரை எனது புகைப்படத்தை என் அனுமதி இல்லாமல் பல இடத்தில் உபயோகப்படுத்தி இருக்கும் அத்தனை பேர் மத்தியில், புகைப்படத்திற்கு நன்றி கூறி ஒரு நல்ல கலைஞனின் குணத்தை காட்டிய உங்களுக்கு நன்றி.
இப்படிக்கு,
உங்கள் நண்பன் பரத்.
பரத்,
உங்கள் புகைப்படங்களைப் பார்த்தேன். அனைத்தும் அருமை !
உங்கள் படத்தை நான் பயன்படுத்தும்போது, உங்களுக்கு கிரெடிட் தரவேண்டியது என் கடமை இல்லையா ? நீங்கள் நன்றி சொல்ல வேண்டிய அவசியமில்லையே, நான் தான் நன்றி கூற வேண்டும் !
மீண்டும் நன்றி.
எ.அ.பாலா
Post a Comment